சிம்ம ராசி அன்பர்களே,

இன்று நன்மைகள் ஓரளவு நடைபெற கூடும். இருந்தாலும் கடினமான உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். எது சரி எது தவறு என்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அனைவரிடமும் சரிசமமாக பழகுவீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் உங்களுக்கு துணையாக இருக்கிறது. நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி காண்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். எதிர்பாராத தேவையற்ற பிரச்சினைகளால் மன அமைதி கெடும் .உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். செல்வாக்கு மிக்க வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது நல்லது. கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். உழைப்பால் உயரும் நாளாக உள்ளது. திட்டமிட்டு செயல்படுவது முக்கியம்.

இன்று பெண்களுக்கு மன அழுத்தம் விலகும். நல்ல காரியங்கள்  கை கூடி வரும்.  மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். கல்வியில் வெற்றி பெறும் சூழல் உள்ளது. உயர் கல்வி மீது ஆர்வம் அதிகரிக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  :  5 மற்றும் 6

அதிஷ்ட நிறம்  :   சிவப்பு மற்றும் நீல நிறம்