கன்னி ராசி அன்பர்களே,

இன்று எதற்கும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அச்சப்பட வேண்டியை  சூழல் அனைத்தும் மாறும். துணையாக இருக்கும் நட்பு வட்டம் விரிவடையும் நாள் என்று சொல்லலாம். எதிர்காலம் சிறப்பாக அமையும். வழக்கு விவகாரங்களில்   நல்ல தீர்ப்பு  கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அக்கறையுடன் செயல்பட்டால் வெற்றி காணலாம்.

இன்று தொழில் வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சில விஷயங்கள் நடக்கவில்லை என்றாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. பொருளாதார நிலை சீராக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். கடல் தாண்டி வரும் செய்திகள் மகிழ்ச்சியை குறிக்கும். திறமையால் வெற்றி பெறுவீர்கள். காசு பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று பெண்கள்  கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். திட்டமிட்டு செயல்படுவதால் முன்னேற்றத்தை காணலாம் .இன்று மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை   : மேற்கு

அதிஷ்ட எண்  :  ஆறு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்   : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்