துலாம் ராசி அன்பர்களே, 

இந்த நாள் உங்களுக்கு பணவரவு எதிர்பார்த்தபடி கண்டிப்பாக இருக்கும். புதிய வேலைகளை உருவாக்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வேலைக்கான அழைப்புகள் வரலாம். தன லாபம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும். நண்பர்களின் சகவாசத்தை தடுப்பதால் நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.

இந்த நாள் பெரிய அளவில் மகிழ்ச்சி ஏற்படும். கடந்த கால நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள். குழப்பங்கள் அனைத்தும் சரியாகும். முயற்சி செய்தால் வெற்றி மீது வெற்றி குவியும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.

இன்று பெண்களுக்கு கண்ணாடி சார்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் தேவை. எதிலும் அவசரப்பட வேண்டாம். சிந்தித்து செயலாற்றுங்கள். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க பாருங்கள். கல்வி பற்றி புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உயர்கல்வியில் மிகுந்த ஆர்வம் ஏற்படும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  :  6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்