சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று மனோ தைரியம் கண்டிப்பாக கூடிவிடும். பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகும். செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் நலம் கருதி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூல் ஆகும்.

சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நட்பால் நல்லது நடக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுத்துவது நல்லது. பெண்களுக்கு ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். சிரமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்துவிடும். மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்.

இன்று மாணவர்கள் புதுமை விரும்பிகளாக காணப்படுவீர்கள். புதுப்புது விஷயங்களை யோசிப்பீர்கள். பெற்றோர் சொல்படி நடக்க பாருங்கள். கோபப்பட வேண்டாம். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்