கடகம் ராசி அன்பர்களே,

இன்று புது புது விஷயங்கள் மனதில் தோன்றும். புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். கோவில் விசேஷங்களை முன் நின்று நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். மதியத்திற்கு மேல் நல்ல செய்தி வரக்கூடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்டு செலவிடுவது நல்லது. அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். அடுத்தவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். கூட்டு தொழிலில் லாபம் ஏற்படும். திருமண வரன்கள் சிறப்பாக அமையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இன்று பெண்கள் பிள்ளைகள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவீர்கள். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். நல்ல செய்தி வீடு தேடி வரும்.

இன்று மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுங்கள். சிந்தித்து செயல்படுவது நல்லது. பொறுமை வெற்றிக்கு வழிவகுக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஒன்று மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் பிங்க் நிறம்