கன்னி ராசி அன்பர்களே,

இன்று எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். முன்னோர்களின் சொத்து கைக்கு வந்து சேரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிள்ளைகள் உங்கள் கருத்துக்கு மதிப்பு கொடுப்பார்கள்.

மனதிற்கு மகிழ்ச்சி தரும் வேலையில் ஈடுபடுவீர்கள். உயர்வான எண்ணங்கள் வெளிப்படும். திறமைகள் அதிகரிக்கும். விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். திறமையால் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் சீராக உயரும். பெண்கள் உழைப்பால் உயர்ந்து கொண்டிருப்பீர்கள்.

சுயதொழில் செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கும். இன்று மாணவர்கள் சிந்திக்காமல் எதிலும் ஈடுபட வேண்டாம். அனைவரையும் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. கல்வியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்