மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கானியாதானா பகுதியில், ஒரு மளிகைக் கடைக்காரர் வாடிக்கையாளரை தாக்கி அவரது விரலை பற்களால் கடித்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
சம்பவ நாளன்று , பகவான் சிங் யாதவ் என்பவர் தனது குழந்தைகளுக்கு சிற்றுண்டியாக நம்கீன்( snack) வாங்கியபோது, பாக்கெட் கெட்டுப்போனது தெரியவந்தது. இதனை மாற்றிக் கொடுக்க வேண்டுமென்று அவர் நேரில் சென்று கடைக்காரரிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறபடுகிறதது.
வாக்குவாதம் தீவிரமான நிலையில், கடைக்காரர் விகாஸ் ஜெயின் கோபத்தில் வெறித்தனமாக நடந்துகொண்டு, பகவான் சிங்கின் விரலை பற்களால் கடித்து அதை துண்டித்துள்ளார். உடனே பொதுமக்கள் தலையிட்டு பகவான் சிங்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் . ஆரம்ப சிகிச்சையுடன் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி, கடைக்காரர் விகாஸ் ஜெயின்மீது “காயம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல்” என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.
