உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஷினி என்ற பெண் பாரில் நடன கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சோனி. இந்த சிறுமிக்கு 6 வயது ஆகிறது.

இந்த நிலையில் ரோஷினிக்கு உதித் ஜெயஸ்வால் என்பவர் உடன் பிறந்த 4 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவருடன் வாழ்வதற்காக ரோஷினி தனது கணவர் ஷாருக்கை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். சம்பவம் நடந்த அன்று ரோஷினி தனது காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனை பார்த்து சோனி தனது தந்தையிடம் இந்த விஷயத்தை கூறுவேன் என கூறியுள்ளார். அந்த சிறுமியை ரோஷினியும் உதித்தும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் சிறுமி கேட்காமல் தந்தையிடம் கண்டிப்பாக இதை கூறி விடுவேன் என்றதால் கோபத்தில் ரோஷினி தனது கள்ளக்காதலுடன் இணைந்து மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் சிறுமியின் உடல் முழுவதும் வாசனை திரவியத்தை பூசி ஏசி அருகே உடலை மறைக்க முயற்சி செய்துள்ளார். பின்னர் ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு போலீசாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எனது கணவர் எனது மகளை கொலை செய்துவிட்டு ஓடிவிட்டார் என கூறினார்.

போலீசார் வந்து பார்த்தபோது சிறுமியின் உடலை சுற்றி பூச்சிகள் மற்றும் துர்நாற்றம் வீசியதால் அவர் கொலை செய்யப்பட்டு பல மணி நேரம் ஆயிருக்கும் என்பதை உறுதி செய்தனர். இதனை அடுத்து ரோஷினியையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

உல்லாசமாக இருந்ததை மகள் நேரில் பார்த்ததால் கோபத்தில் இருவரும் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அதன் பிறகு ஷாருக்கை குற்றவாளியாக காட்ட முடிவு செய்து சதி திட்டம் தீட்டி, சிறுமியின் உடல் முழுக்க வாசனை திரவியத்தை தெளித்து ஏசிக்கு அருகில் உடலை மறைக்க முயற்சி செய்துள்ளனர்.

அதன் பிறகு ஒன்றாக அமர்ந்து மீண்டும் மது குடித்து தனிமையில் உல்லாசமாக இருந்தனர். மறுநாள் ரோஷினி போலீசாரை தொடர்பு கொண்டு கணவர் செய்து விட்டதாக கூறிய போது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமி கொலை செய்யப்பட்டு 36 மணி நேரம் ஆனதும் பிரேத பரிசோதனையில் உறுதியானது. தற்போது போலீசார் ரோஷினியையும் உதித்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.