உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஷினி என்ற பெண் பாரில் நடன கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சோனி. இந்த சிறுமிக்கு 6 வயது ஆகிறது.
இந்த நிலையில் ரோஷினிக்கு உதித் ஜெயஸ்வால் என்பவர் உடன் பிறந்த 4 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவருடன் வாழ்வதற்காக ரோஷினி தனது கணவர் ஷாருக்கை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். சம்பவம் நடந்த அன்று ரோஷினி தனது காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனை பார்த்து சோனி தனது தந்தையிடம் இந்த விஷயத்தை கூறுவேன் என கூறியுள்ளார். அந்த சிறுமியை ரோஷினியும் உதித்தும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் சிறுமி கேட்காமல் தந்தையிடம் கண்டிப்பாக இதை கூறி விடுவேன் என்றதால் கோபத்தில் ரோஷினி தனது கள்ளக்காதலுடன் இணைந்து மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் சிறுமியின் உடல் முழுவதும் வாசனை திரவியத்தை பூசி ஏசி அருகே உடலை மறைக்க முயற்சி செய்துள்ளார். பின்னர் ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு போலீசாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எனது கணவர் எனது மகளை கொலை செய்துவிட்டு ஓடிவிட்டார் என கூறினார்.
போலீசார் வந்து பார்த்தபோது சிறுமியின் உடலை சுற்றி பூச்சிகள் மற்றும் துர்நாற்றம் வீசியதால் அவர் கொலை செய்யப்பட்டு பல மணி நேரம் ஆயிருக்கும் என்பதை உறுதி செய்தனர். இதனை அடுத்து ரோஷினியையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் பிடித்து விசாரித்த போது உண்மை தெரியவந்தது.
குற்றவாளியான ரோஷினி பற்றி தற்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. ரோஷினி தனது மைத்துனர், மாமியார், இரண்டு மைத்துணிகளை பொய்யான வழக்கில் சிக்க வைத்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரோஷினி தனது மகளை “பெரியப்பா என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்” என கூறவைத்து ஒரு வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கினார். அது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரோஷினியின் மைத்துனர், மாமியார், இரண்டு மைத்துனிகள் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். மே மாதம் 18ஆம் தேதி ரோஷினி தனது கணவர் சாருக்கை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார். மகளை கொலை செய்து கணவரை சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டியபோது ரோஷினி செய்த அனைத்து காரியங்களும் உலகிற்கு தெரியவந்துள்ளது.
