தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் தங்களின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி செங்கோட்டையன் மேடையில் பேசிய வினோதமான மருத்துவக் குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
அதாவது செங்கோட்டையன் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், “சின்ன குழந்தைகளுக்குச் சளி பிடித்தால், அவர்கள் ஒரு பெரிய விசிலை எடுத்து ஊதினாலே போதும், சளி குணமாகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார். தனது இந்தப் பேச்சுக்கு வலுசேர்க்கும் வகையில் அவர் மேலும் கூறியதாவது, ஆயுர்வேதத்தில் மூச்சுப் பயிற்சி அவசியம் என்று கூறுவார்கள். விசில் அடிப்பது என்பது ஒரு சிறந்த மூச்சுப் பயிற்சியாகும். பெரிய அளவில் விசிலை ஊதும்போது, அது இதயத்தை நன்றாகச் செயல்பட வைக்கும். விசில் என்பது இயற்கையோடு தொடர்புடைய ஒரு சின்னம் என்பதால், இது உடலுக்கு நன்மை பயக்கும்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஒருபுறம் இது வேடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் மருத்துவ ரீதியான ஆதாரங்கள் இன்றி பொதுமேடைகளில் இத்தகைய கருத்துகளைப் பரப்புவது சரியா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இருப்பினும், ‘தளபதி’யின் தவெக தொண்டர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து, தங்கள் நிர்வாகியின் பேச்சை வைரலாக்கி வருகின்றனர்.
#WATCH | “குழந்தைகளுக்கு சளி பிடித்தால்,
விசில் அடித்தால் போதும் நின்று விடும்!”-தவெக நிர்வாகி செங்கோட்டையன் தேர்தல் பரப்புரை#SunNews | #Sengottaiyan | #TNElectionWithSunNews pic.twitter.com/FCYi0soQDB
— Sun News (@sunnewstamil) April 6, 2026
