மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய மானை தைரியமாக மீட்ட பெண்ணின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், ஒரு பெரிய மலைப்பாம்பு சாலையோரத்தில் ஒரு மானை சுற்றி பிடித்து வேட்டையாடும் காட்சி காணப்படுகிறது. அந்த நேரத்தில், அவ்வழியாகச் சென்ற ஒரு காரில் இருந்த பெண் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மானை மீட்க முனைந்தார்.
அவர் காரில் இருந்த ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு, அதில் இலைகளை நிரப்பி மலைப்பாம்பை விரட்ட முயன்றார். ஆனால், பாம்பு கோபமடைந்து அவரை நோக்கி தாக்கியது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தைரியமாக எதிர்கொண்ட அந்தப் பெண், இறுதியில் பாம்பை விரட்டியடித்து மானின் உயிரைக் காப்பாற்றினார்.
Spašena od udava i postala član porodice♥️ pic.twitter.com/kttxzAWxCV
— Zoran Nemanjic (@NemanjicZoran) October 15, 2025
பின்னர் மான் நேராக அந்தப் பெண்ணை நோக்கி சென்றது. இரக்கத்தால் அவர் மானை வீட்டிற்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து பராமரித்தார். தற்போது அந்த மான், அந்தப் பெண்ணின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காட்சி அடங்கிய காணொளி, சமூக வலைதளமான ‘X’ தளத்தில் @NemanjicZoran என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ 1.47 லட்சம் முறை பார்க்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் “இயற்கைக்கும் நீதி உண்டு!”, “மான் அதிர்ஷ்டசாலி, மலைப்பாம்பின் பிடியிலிருந்து தப்பிப்பது அரிது,” எனப் பதிவிட்டுள்ளனர்.
முதலில் சிலர் நகைச்சுவையாக, “பாம்பு தனது இரையை இழந்துவிட்டது; இப்போது புதிய உணவு தேட வேண்டியிருக்கும்,” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
