ஹைதராபாத் கேபிஹெச்பி காலனியில் பைக் நிறுத்திய விவகாரத்தைத் தொடர்ந்து தம்பதியர் மீது கொடூர தாக்குதல் நடந்தது. ரோடு நம்பர் 5-ல் வசித்து வரும் தம்பதியர், தங்கள் வீட்டின் முன் ஹாஸ்டல் மாணவர்கள் பைக்குகளை நிறுத்த வேண்டாம் என பலமுறை கேட்டிருந்தனர். இதுகுறித்து பல முறை புகாரும் அளித்திருந்த போதிலும், ஹாஸ்டல் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

இந்நிலையில், ஹாஸ்டல் மாணவர்களின் பைக்கில் இருந்த சீட் கவர் கிழிக்கப்பட்டது காரணமாக நிலைமை தீவிரமடைந்தது. இதனை தம்பதியர் செய்ததாக சந்தேகித்த சுமார் 30 ஹாஸ்டல் மாணவர்கள் ஒன்று சேர்ந்து தம்பதியரையும், அவர்களது குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.