ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பல தொழில்கள் உள்ளது. அதில் ஓட்டுநர் பணியும் ஒன்று. அந்தத் துறையிலும் தற்போது பெண்கள் தங்களது திறமைகளை காட்ட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த நேஹா தாகூர் என்ற பெண் தைரியமாக பேருந்தை ஓட்டுகிறார்.
பொதுவாக பெண்கள் கனரக வாகனங்களை ஓட்டுவதில் அப்படி இருக்கும்போது அந்த பெண் தைரியமாக பேருந்தை ஓட்டியது மக்களை ஆச்சரியப்படுத்தியது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களிலும் அந்த பெண் திறமையாக பேருந்தை ஓட்டினார். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் nehuthakur2529 என்ற ஐடியில் பகிரப்பட்டது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.
View this post on Instagram
