கனமழை பெய்தாலே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். பல்வேறு இடங்களில் வெள்ளம் வடிய வழி இல்லாமல் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுவார்கள்.
அந்த வகையில் பயணிகளை பாதுகாக்க இ-ரிக்ஷா ஓட்டுனரின் புது ஐடியா மக்களை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் தனது வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். அங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில் இ- ரிக்ஷா வந்து நின்றது. அந்த வாலிபருக்கும் ரிக்ஷாவுக்கும் இடையே சிறிது தூரம் இருந்தது.
क्या कहता था अमेरिका, अब हम कहते हैं तू क्या है बे 😂🤣🤣
😂 इंडियन जुगाड़ 😂 pic.twitter.com/m873fjUDT4
— Mahima Yadav (@SinghKinngSP) August 13, 2025
பயணி தண்ணீரில் கால் வைக்காமல் நேரடியாக ஆட்டோவில் ஏறுவதற்காக ரிக்ஷா ஓட்டுனர் கம்பியால் வழி ஒன்றை அமைத்திருந்தார். ரிக்ஷா புறப்படும் போது அந்த கம்பி மடங்கி கொள்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஓட்டுனரின் புது ஐடியாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
