போலந்தின் குரோசிக் காட்டில் ஆய்வாளர்கள் 631 தங்க நாணயங்களையும் ஒரு நெக்லசையும் கண்டுபிடித்துள்ளனர். அது பற்றி ஆய்வு செய்தபோது அது 1500 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்தது. முதலில் ரோமானிய காலத்தில் ஒரு பழமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கல்லறையில் போர் வீரனின் எலும்பு கூடும் ஈட்டியும் கேடயமும் இருந்தது. பின்னர் 11-ம் நூற்றாண்டின் நாணயத்தையும் ஒரு சிறிய மண் பானையையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். பல்கலைக்கழகத்திற்கு சென்று அதனை திறந்து பார்த்தபோது 631 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மற்றொரு பானையை திறந்து பார்த்தபோது 5-ஆம் நூற்றாண்டின் தூய தங்க நெக்லஸ் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் எடை 222 கிராம். அந்த நெக்லஸின் ஒருபுறம் கொக்கி, மற்றொரு புறம் லூப் வடிவமைப்பில் இருந்தது. அந்த இடத்தில் ஆய்வாளர்கள் மீண்டும் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.