இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய ஜாம்பவானுமான ரோஹித் சர்மாவுக்கு மகாராஷ்டிராவின் அஜிங்கியா DY பாட்டில் பல்கலைக்கழகம் (Ajinkya DY Patil University) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. கிரிக்கெட் உலகில் அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பு மற்றும் இந்திய அணியை ஒரு முன்மாதிரியான கேப்டனாக வழிநடத்திய அவரது தலைமைப் பண்பைப் பாராட்டி இந்த உயரிய விருது வழங்கப்பட உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழாவில், ரோஹித் சர்மாவுக்கு இந்தப் பட்டம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட உள்ளது.

​ரோஹித் சர்மா என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அவரது அபாரமான சிக்ஸர்களும், கூலான தலைமைத்துவமும்தான். இந்திய அணியை உலகத்தரம் வாய்ந்த அணியாக மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இதை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதைக் கேட்டு கிரிக்கெட் ரசிகர்கள் சோஷியல் மீடியால ‘டாக்டர் ஹிட்மேன்’ அப்படின்னு இப்போவே ட்ரெண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க