நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் சிவம் துபேயின் புதிய சிகை அலங்காரம் சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

இந்தப் போட்டியில் பந்துவீச வந்தபோது அவரது வித்தியாசமான ஹேர் ஸ்டைலைக் கவனித்த ரசிகர்கள், அதனைப் பள்ளிச் சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் செய்துவிடும் பழைய காலத்து அலங்காரத்துடன் ஒப்பிட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு சிலர் அவரது தோற்றத்தை இட்லருடன் ஒப்பிட்டும் விமர்சித்தனர்.

 

ஆட்டத்தில் 4 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த அவர், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதே சமயம் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 20 பந்துகளில் 44 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்த நிலையில், சிவம் துபேக்குப் பதிலாக ரிங்கு சிங்கிற்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இணையத்தில் எழுந்துள்ளது.