தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பி வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ‘வேலைக்குப் பணம் பெற்ற மோசடி வழக்கு’ விவகாரத்தில், புதிய தவெக அரசுப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அமலாக்கத்துறை (ED) எடுத்துள்ள அதிரடி மூவ் கோட்டை வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

இந்த பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 4 பேர் மீதான நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்கு, மாநில அரசின் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாததே முட்டுக்கட்டையாக இருந்து வந்த சூழலில், தற்பொழுது புதிய தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை நேரடியாக அதிரடி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அமலாக்கத்துறை, இந்த முறை அவரை மீண்டும் விசாரிப்பதற்கான வலுவான ஆதாரங்கள் மற்றும் ரகசியக் குறிப்புகளுடன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது; விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அமலாக்கத்துறையின் இந்த “டைரக்ட் அட்டாக்” அறிவாலயம் மற்றும் கோட்டை வட்டாரத்தில் அடுத்த கட்ட பரபரப்பை எகிறச் செய்துள்ளது.