மேற்காசியப் போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தாறுமாறாக எகிறியுள்ள நிலையில், பொதுமக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இன்று (மே 19) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சென்னையில் இன்று (மே 19) பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103.67-க்கும், டீசல் ரூ.95.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
கடந்த 15-ம் தேதியன்று தான் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.14-ம், டீசல் லிட்டருக்கு ரூ.3.11-ம் உயர்த்தப்பட்டு வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து போயிருந்த சூழலில், தற்பொழுது மீண்டும் பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் கூட்டி நடுத்தரக் குடும்பங்களின் பட்ஜெட்டில் எண்ணெய் நிறுவனங்கள் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளன.
பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தபடியே இந்த விலை உயர்வு அரங்கேறியுள்ளதால், லாரி வாடகை உயர்ந்து தற்பொழுது பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது ஏழை எளிய மக்களிடையே பெரும் குமுறலையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
