26 வயதே ஆன ஒரு இளைஞர், சிகரெட், மது போன்ற எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்; உடலமைப்பும் பார்ப்பதற்கு மிகவும் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது. ஆனால், அவர் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு ஆபத்தான பழக்கம் அவரை முடக்கியுள்ளது. அதுதான் ‘போதிய தூக்கமின்மை’. ஆயுர்வேத மருத்துவர் ரிஷிகேஷ் காண்டேகர் அளித்துள்ள விளக்கத்தின்படி, தூக்கமின்மை என்பது வெறும் சோர்வை மட்டும் தருவதில்லை; அது இரத்தத்தை தடிமனாக்கி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.

இதனால் உடலில் மன அழுத்த ஹார்மோன்கள் சுரந்து, உடலின் உட்புறப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் வேலைகள் (Repairing) முற்றிலும் முடங்கிவிடுகின்றன. பலர் வாரம் முழுவதும் குறைவாகத் தூங்கிவிட்டு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக நேரம் தூங்கி அதை ஈடுகட்ட நினைக்கிறார்கள். ஆனால், அறிவியல் ரீதியாக தூக்கத்தை அப்படி ஒருபோதும் ஈடுகட்ட முடியாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

முறையற்ற தூக்க சுழற்சி உடலை மட்டுமல்லாது, மனதையும் தலைமுடியையும் கடுமையாகப் பாதிக்கிறது. தூக்கமின்மையால் உச்சந்தலைக்கான இரத்த ஓட்டம் குறைந்து, மன அழுத்தம் அதிகரிப்பதால் புதிய முடிகள் வளர்வது நின்று, முடி உதிர்தல் வேகம் பெறுகிறது. மருத்துவரிடம் வரும் 90 சதவீத நோயாளிகளுக்கு முடி உதிர்வதற்குப் போதிய தூக்கமின்மையே முக்கியக் காரணமாக இருக்கிறது.

தூக்கத்தைச் சீராக்கினாலே முடி உதிர்வுப் பிரச்சினை பாதியாகக் குறைந்துவிடும். தூக்கமின்மையால் பக்கவாதம் ஏற்பட்டு, தற்போது மீண்டும் நடக்கப் பழகி வரும் அந்த இளைஞர், “இரவுத் தூக்கத்தை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள்; தூக்கம் என்பது வெறும் ஓய்வு அல்ல, அது உடலின் மறுசீரமைப்பு வேலை. அதைத் தவறவிட்டால் மூளை, இதயம், முடி என அனைத்தும் ஒரே நேரத்தில் முடங்கிவிடும்” என்று உருக்கமான விழிப்புணர்வு ஆலோசனையை வழங்கியுள்ளார்,

https://www.instagram.com/reel/DZKwCysBUv0/?igsh=YmRraHNjdGY5emZ4