இமாச்சல் பிரதேசத தலைநகர் சிம்லாவில் தெருநாய்களின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், தாலி சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்த சிறுவனை 8-க்கும் மேற்பட்ட நாய்கள் தாக்கியதால், அவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அந்த சிறுவனின் தந்தை கர்ம்சந்த் பாட்டியா, மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் அமர்ந்து, நிர்வாகத்தின் அலட்சியத்தை கடுமையாக விமர்சித்தார்.
शिमला ढली में बच्चे को काटने का वीडियो आया सामने ,कुत्तों के झुंड ने किया था स्कूली बच्चों पर हमला, पुलिस कर्मी ने सबसे पहले बचाया । pic.twitter.com/MqovAg9E7a
— City News Himachal (@city_news_in) May 3, 2025
மேலும், சிம்லா மாநகராட்சி தொடர்ந்து உறுதிமொழிகளை மட்டுமே அளித்து வருவதாகவும், நடைமுறை நடவடிக்கைகள் எதுவும் இல்லையெனவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிம்லா மாநகராட்சி மேயர் சுரேந்திர சவுகான், நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்துள்ளதாகவும், அதற்கு எதிராக, திட்டங்கள் மட்டும் போதாது, திடமான நடைமுறை நடவடிக்கைகள் தேவை என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
