
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில் தினம் தோறும் ஏதாவது ஒரு வேடிக்கையான வீடியோ வைரலாகி வருகிறது.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் குட்டிகளுடன் குரங்கு ஒன்று சாலையில் அமர்ந்து கொண்டிருக்கிறது. அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் குரங்கு முன்பு செல்கிறார். குனிந்து குரங்கின் முன்பு பாட்டிலை காட்டுகின்றார். குரங்கு துள்ளி குதித்து தண்ணீர் குடிக்க தொடங்குகின்றது. அப்போது மற்றொரு குரங்கு அங்க வந்த நிலையில் தண்ணீர் குடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இரண்டு குரங்குகளும் அங்கிருந்து கிளம்ப மூன்றாவது குரங்கு வந்து தண்ணீர் குடிக்க தொடங்குகின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க