மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டம் அஹ்ரௌலி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாதா கோயிலில், பழைய கூரையை இடித்துவிட்டு புதிய கோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று மதியம் 2 மணியளவில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கோயிலின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி வைஷ்ணவி (11), சாயா (7) மற்றும் கரிஷ்மா (9) ஆகிய மூன்று சிறுமிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
