தர்மபுரி மாவட்டம் அருகேயுள்ள அறிவுரை அடுத்த கீரிப்பட்டி கிராமத்தில் பரபரப்பான கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளராக இருந்த ரசூல் என்பவரை, அவரது மனைவி அம்முபி, தனது கள்ளக் காதலனான சலூன் கடை உரிமையாளர் லோகேஸ்வரனுடன் சேர்ந்து விஷம் வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசூல் கடந்த 5ம் தேதி இரவு உணவு உணவருந்திய பிறகு திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையின் போது அவருடைய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து இருப்பது தெரியவந்தது. இந்த தகவலையடுத்து போலீசார் விசாரணை தொடங்கினர்.
போலீசாருக்கு அவரது மனைவி அம்முபி மீது சந்தேகம் வந்தது. அம்முபி தங்களது ஊரே சேர்ந்த சலூன் கடை வைத்திருந்த லோகேஸ்வரனுடன் கடந்த 6 ஆண்டுகளாக முறையற்ற உறவில் இருந்துள்ளார்.
அம்முபியின் செல்போனை சோதனையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. அந்த மொபைலில், “உணவுக்கு கலந்தது சரியாக வேலை செய்யவில்லை, இப்போது மாதுளை ஜூஸில் கலக்கி கொடுத்துள்ளேன்” என்ற ஆடியோ ரெக்கார்டிங் இருந்தது. மேலும், லோகேஸ்வரனும் அவருடன் திட்டமிட்டு பேசியதும் பதிவாகி இருந்தது.
இந்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு அம்முபி மற்றும் லோகேஸ்வரன் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பூச்சி மருந்து கலந்த மாதுளை ஜூஸை கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரசூல் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து, வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
