போர்முனையில் பயன்படுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட புதிய ரக ஏவுகணையான ‘பிரலே’ஐ இந்திய ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பு (DRDO) வெற்றிகரமாக சோதித்துள்ளது.
500 முதல் 1000 கிலோ எடையுடன் குறுகிய தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, 500 கி.மீட்டருக்குள் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும் வல்லமை பெற்றது. முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு நேரடி பதிலாக இந்திய ராணுவத்தின் போர்திறனை மேம்படுத்தும் வகையில் உள்ளது.
ஒடிசா மாநில கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில், கடந்த இரண்டு நாள்களில் பிரலே ஏவுகணை சோதனை நடைபெற்றது. இரண்டும் வெற்றிகரமாக முடிந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர். இந்த முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானர்களை பாராட்டிய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், “பிரலே ஏவுகணை நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆயுதப்படைகளுக்கு வலுவூட்டும் ஒரு முக்கிய ஆயுதமாகும்” எனத் தெரிவித்தார். இது ஒரு முக்கிய சாதனையாகவும் கருதப்படுகிறது.
