டெல்லியின் டேகோர் கார்டன் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்கூட்டியில் சென்ற பெண் ஒருவரின் மீது திடீரென மின்கம்பம் இடிந்து விழுந்தது. ஆனால் அதிசயமாக அவர் உயிருடன் தப்பியதால், அதைக் கண்டவர்கள் “ஜான்கோ ராகே சாயியாம், மார்சகேனா கோய்” என கூறி திகைத்தனர்.
இந்த சம்பவத்தின் முழுக் காட்சியும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. வீடியோவில், பெண் ஒருவர் சாலையில் ஸ்கூட்டியில் நிதானமாக செல்லும்போது, அருகில் உள்ள மின் கம்பம் திடீரென உடைந்து நேராக அவரது மீது விழுகிறது. அதற்குள் ஒரு வினாடி கூட யோசிக்க முடியாமல் கம்பம் அவர் மீது விழுந்தபோதும், பெரும் காயம் ஏதும் ஏற்படாமல் பெண் அதிசயமாக உயிருடன் தப்பினார்.
‘जांको राखे साईयां मार सके ना कोई…’ हैरान कर देगा ये वीडियो…
दिल्ली के टैगोर गार्डन में स्कूटी सवार महिला पर अचानक बिजली का खंभा गिर गया, लेकिन किस्मत अच्छी थी कि महिला बाल-बाल बच गई. पूरा हादसा वहां लगे सीसीटीवी कैमरे में रिकॉर्ड हो गया.#delhi | #cctvfootage | #cctv |… pic.twitter.com/RhQHHXDse6
— NDTV India (@ndtvindia) July 29, 2025
“>
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த சம்பவம் சற்றே தாமதமாக நடந்திருந்தால் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மின் வாரியத்தின் பராமரிப்பு அலட்சியம் குறித்தும் புகார்கள் எழுந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
