ஐதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் ஒருவர், 25 வயது இளம்பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. வேலைப்பளு மற்றும் தூக்கமின்மையால் ஏற்பட்ட சாதாரண தலைவலி என்று அந்தப் பெண் அலட்சியமாக இருந்த நிலையில், ஒரு வாரமாகத் தொடர்ந்த வலியால் மருத்துவரை அணுகியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட மூளை ஸ்கேன் முடிவில் அவருக்கு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் நடக்கவிருந்த சூழலில், இந்தச் செய்தி அவருக்குப் பேரிடியாக அமைந்தது.

இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அது உயிருக்கு ஆபத்தில்லாத ‘மெனிஞ்சியோமா’ வகை கட்டி என்பது பயாப்ஸி சோதனையில் உறுதியானது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவர் குணமடைந்தார். தற்போது அவர் திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

“எல்லா தலைவலிகளும் சாதாரணமானவை அல்ல; இளம் வயது என்பது நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்காது” என்று அந்த மருத்துவர் எச்சரித்துள்ளார்.

“>

 

குறிப்பாக, காலையில் ஏற்படும் தலைவலி, தூக்கத்தைக் கலைக்கும் அளவிலான தீவிர வலி, பார்வைக் குறைபாடு அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால், அதைச் சாதாரண தலைவலி என்று ஒதுக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.