கேரளாவில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 13) நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள், மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு (LDF) சவாலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. மதியம் 2 மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மாபெரும் முன்னிலையைப் பெற்றுள்ளது.

​மொத்தம் உள்ள 941 ஊராட்சிகளில் (கிராம பஞ்சாயத்துகள்) காங்கிரஸ் கூட்டணி (UDF) 498 இடங்களிலும், ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி (LDF) 341 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜக கூட்டணி 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும், மாநிலத்தின் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கூட்டணி 1 இடத்திலும், பாஜக கூட்டணி 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், காங்கிரஸ் தலைமையிலான UDF, கம்யூனிஸ்ட் தலைமையிலான LDF-ஐ விடப் பல மடங்கு அதிக இடங்களைக் கைப்பற்றி வலுவான நிலைக்கு உயர்ந்துள்ளது.