மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், கடந்த 40 நாட்களில் மட்டும் 150 திருமணங்கள் கடைசி நேரத்தில் நின்று போனச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலான திருமணங்கள், மணமகன் அல்லது மணமகளின் சமூக வலைதளப் பக்கங்களில் உள்ள முன்னாள் காதலன்/காதலிகளின் பதிவுகள் காரணமாகவே ரத்தாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தூர் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, திருமணத்திற்கு முன் ஃபோட்டோ ஷூட் எடுத்துக்கொண்டிருந்தபோது, மணமகளின் சமூக வலைதளப் பதிவுகளால் வாக்குவாதம் ஏற்பட்டு, திருமணம் நின்றுபோன சம்பவமும் நடந்துள்ளது.

திருமணங்கள் கடைசி நேரத்தில் ரத்தாவதால், குடும்பங்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. திருமண மண்டபம், கேட்டரிங், அலங்காரம் போன்றச் சேவைகளை வழங்கிய வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் திருமண ரத்துகளால் ஒரே ஆண்டில் மட்டும் சுமார் ரூ.45 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் சூரி தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், சென்னையைச் சேர்ந்த ஒருப் பெண்ணுக்கும் நடக்கவிருந்த திருமணமும், ரயில் நிலையத்தில் மணமகன் தனது முன்னாள் காதலிக்குச் சமூக வலைதளத்தில் தகவல் அனுப்பியதை மணமகள் கண்டுபிடித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு நின்று போனது குறிப்பிடத்தக்கது.