உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 10 சதவீதப் பணக்காரர்கள் சுமார் 65 சதவீதச் சொத்துக்களைத் தங்கள் வசம் வைத்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் முதல் 1 சதவீதப் பணக்காரர்கள் மட்டும், மொத்தச் சொத்துக்களில் 40.1 சதவீதத்தை வைத்துள்ளனர். இந்த எண்ணிக்கை, சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் வருமான ஏற்றத்தாழ்வில் பெரிய மாற்றம் இல்லை என்பதைக் காட்டுகிறது.
இந்தியாவில் உள்ள 40 சதவீத நடுத்தர மக்கள், மொத்தச் சொத்துக்களில் 28.6 சதவீதத்தை வைத்துள்ளனர். அதேசமயம், நாட்டின் அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்கள் மொத்தச் சொத்துக்களில் வெறும் 6.4 சதவீதத்தை மட்டுமே வைத்துள்ளனர்.
மேலும், இந்த அடித்தட்டு மக்கள், இந்தியாவின் மொத்த வருமானத்தில் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகிறார்கள். உலகளவில் பார்க்கும்போது, முதல் 10 சதவீதப் பணக்காரர்கள் சுமார் 75 சதவீதச் சொத்துக்களை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
