கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘திருடனுக்கு திருடன்’ என்றப் பழமொழிக்கேற்ப ஒரு நூதனக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அம்ருதஹள்ளியைச் சேர்ந்த ராஜ் என்றத் திருடன், பூட்டியிருந்த வீடுகளில் கைவரிசைக் காட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், ஒரு வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹20,000 ரொக்கம் ஆகியவற்றைத் திருடிவிட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சுடுகாடு பகுதிக்கு வந்து ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார்.

அப்போது, திடீரென அங்குத் தோன்றிய 4 இளைஞர்கள் ராஜை மிரட்டிச் சோதனையிட்டனர். ராஜின் வசமிருந்தத் திருட்டு நகைகள் மற்றும் பணத்தைக் கண்டு பிடித்து எல்லாவற்றையும்ப் பறித்துக்கொண்டனர்.

தான் ஒரு திருடன் தான் என்று ராஜ் கூறியபோதும், அந்த இளைஞர்கள் அவனை மிரட்டி, செலவுக்கு ₹3,000 மட்டும் கொடுத்து அனுப்பிவைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜ், சற்றும் மனம் தளராமல், அதேப் பகுதியில் இருந்த மேலும் 2 வீடுகளில் புகுந்து 120 கிராம் தங்கம் மற்றும் ₹1.5 லட்சம் ரொக்கம் திருடினார். இந்தச் சம்பவம் பெங்களூருவில்ப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.