இன்ஸ்டாகிராமில் ஒரு வேடிக்கையான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் மர வேலைகள் செய்யும் ஒரு கடையின் விளம்பர பலகை காட்டப்படுகிறது. கடை உரிமையாளர் ஒரு சுவாரஸ்யமான ஆஃபர் வைத்துள்ளார். பப்ஜி என்ற விளையாட்டில் தன்னுடன் போட்டி போட்டு யார் ஜெயித்தாலும், அவர்களுக்கு பொருட்களின் விலையில் 50% தள்ளுபடி கொடுப்பேன் என்று பலகையில் எழுதியுள்ளார்.
இந்த ஆஃபர் இப்போது இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் இதைப் பற்றி வேடிக்கையாக பேசி வருகின்றனர். பலர் இந்தக் கடைக்குச் சென்று பப்ஜியில் போட்டியிட தயாராகி வருவதாகவும் கமெண்ட் செய்கின்றனர். இது ஒரு விளம்பரமாக இருந்தாலும், ரொம்ப ஃபன்னியாக அமைந்துள்ளது.
