சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படும் வீடியோவாக தற்போது ஒரு நாய் மாறியுள்ளது. டெல்லி–என்சிஆர் பகுதிகளில் தெருநாய்களை தங்குமிடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு மீது போராட்டங்கள் தொடரும் நிலையில், இந்த நாய் வரைந்த ஓவியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வாயால் பிரஷ்  பிடித்து இந்திய மூவர்ணக் கொடியை வரைந்த இந்த நாய், மக்கள் மத்தியில் “தேசபக்தி கொண்ட நாய்” என்று அழைக்கப்படுகிறது.

வீடியோவில், லாப்ரடார் இன நாய் தன் வாயில் பச்சை வண்ண பிரஷ்  பிடித்து வெள்ளை காகிதத்தில் வண்ணமிட்டு, அதன் பின் காவி நிறத்தை வரைந்து காட்டுகிறது. பின்னர், அதன் எஜமானி அதை நேராக்கும்போது, அது மூவர்ணக் கொடி வடிவில் தெரிகிறது. இவ்வாறு, இந்தியக் கொடியை ஓவியம் வரைந்த முதல் நாய் என்று பாராட்டப்படுகிறது. இந்த இதயத்தைத் தொடும் காட்சி இன்ஸ்டாகிராமில் im.labrador.dali என்ற பக்கத்தில் பகிரப்பட்டு, ஏற்கனவே 1.8 லட்சம் பார்வைகள் மற்றும் 23 ஆயிரம் லைக்ஸ் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Dali 🐶 (@im.labrador.dali)

“>

இந்த வீடியோவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், “சூப்பர் டாலி… டெல்லியின் தெருநாய்களுக்கு உதவ இன்னொரு ஓவியம் வரைந்து கொடு” என்று கருத்து எழுதியுள்ளார். இன்னொருவர், “இந்தக் கொடியைப் போலவே நம் நாட்டில் உள்ள அனைத்து நாய்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான அடையாளம் இது” எனக் குறிப்பிட்டுள்ளார். நாயின் இத்தகைய திறமைக்கு நெட்டிசன்கள் கைதட்டி பாராட்டி வருகின்றனர்.