ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது தங்கையுடன் பஞ்சாப் செல்வதற்காக ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது போலீஸ் என கூறி அங்கு வந்த 2 பேர் சிறுமிகளின் பெயர் மற்றும் விபரங்களை கேட்டு அவர்களை விசாரணை என்ற பெயரில் மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றனர்.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இரண்டு பேரும் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இருவரையும் மோட்டார் சைக்கிளில் மெத்னி நகர் பகுதிக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் தங்கை திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்து உதவி கேட்டு கூச்சலிட்டதால் மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சோனு குமார், சுமித் குமார் இருவரையும் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.