மேகாலயாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், பள்ளி சீருடையில் ஒரு சிறுவன் , முதுகில் பையைத் தொங்கவிட்டு, ராஜரீகமாக குதிரையில் ஏறி தனது பள்ளியை நோக்கிச் செல்வது காட்சியளிக்கிறது.

பொதுவாக குதிரை சவாரி ஆபத்தான விளையாட்டு என்பதால், இது பயிற்சி பெற்றவர்களின் மேற்பார்வையில் மட்டுமே நடைபெறும். ஆனால், எந்த மேற்பார்வையும் இன்றி சிறுமி குதிரையை நம்பிக்கையுடன் கட்டுப்படுத்திய விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தின் அழகிய மலைப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த காட்சியில், சிறுவன்  தொழில்முறை சவாரி செய்பவரைப் போல குதிரையை இயக்குகிறார். அப்போது ஒரு கருப்பு நாயும் அவளுடன் ஓடிக்கொண்டிருப்பது காணப்படுகிறது. சில நொடிகளில், குதிரை நாயின் பின்னால் வேகமாக ஓடினாலும், சிறுவன்  அதை எளிதாகக் கட்டுப்படுத்தி மீண்டும் பாதைக்கு திருப்புகிறாள். இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், “இது துணிச்சலின் உச்சம்” என்று பாராட்டுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Twinkle JoAnna (@twinklejoanna)

“>

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் @twinklejoanna வெளியிட்டுள்ளார். இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இதைப் பார்த்துள்ளனர். பலரும் கருத்துப் பகுதியில் தங்கள் எதிர்வினைகளை பதிவு செய்து வருகின்றனர். ஒருவர், “எதைச் சொன்னாலும், இந்தக் காட்சி அற்புதம் தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், “இந்தக் குழந்தை நிச்சயம் குதிரை சவாரியில் வல்லவர்” என்று எழுதினார். இன்னொருவர், “கவலைப்பட தேவையில்லை, அவள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறாள்” எனக் கருத்து தெரிவித்தார். தற்போது, இந்தக் காணொளி இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.