விஜய் மக்கள் இயக்க “IT WING” நிர்வாகிகளுடன் வரும் 26ம் தேதி நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அப்போது மகளிர் அணி, இளைஞர் அணி உள்ளிட்ட 10 அணிகள் மற்றும் நகர, ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க 1,000 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே செப்.17ல் பெரியார் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது