சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று புதிய உச்சம் கண்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 45,200க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ. 5,650க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 குறைந்து ரூ.81.50க்கும் விற்பனையாகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலர் விலை ஏற்றத்தின் எதிரொலியாக விலை குறைந்துள்ளது.