வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் விளையாட்டு மைதானத்தில், 1.5 மீட்டர் உயரமுள்ள சறுக்கு மரத்தில் (Slide) விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரை, மற்றொரு குழந்தை திடீரென கீழே தள்ளிவிட்டுள்ளார். கடந்த ஜூன் 7-ஆம் தேதி இரவு நடந்த இந்த கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண் இமை எலும்பு முறிவு (Orbit Fracture) மற்றும் தலையில் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தற்பொழுது அச்சிறுமி தேசிய குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்திற்குக் காரணமான குழந்தை ‘ஆட்டிசம்’ குறைபாடுடையவர் என்பதும், சம்பவத்தின் போது அவரது பெற்றோர் குழந்தையை கவனிக்காமல் தனியாக விட்டதே இந்த அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறுகையில், “சிறப்புக் குழந்தைகளால் தங்களின் உணர்ச்சிகளையும் நடத்தையையும் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை நாங்கள் அறிவோம்; எனவே, அத்தகைய குழந்தைகளின் பெற்றோர் தங்களது பிள்ளைகளை ஒரு நொடி கூட கண் அசைக்காமல் தீவிரமாக கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது” என சமூக வலைதளத்தில் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து இதுவரை சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், இப்புகைப்படங்களும் பதிவுகளும் இணையத்தில் வெளியாகி பெற்றோர்களிடையே பெரும் விவாதத்தையும் பரவபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
อัปเดตอาการของน้องที่ถูกผลักลงจากสไลด์เดอร์สูง 1.5 เมตรที่เวียดนามนะคะ
– ผลการตรวจเบื้องต้นคืออาการสาหัสกระดูกเบ้าตาแตก มีเลือดออกที่ศีรษะ แพทย์ติดตามอาการอย่างใกล้ชิด
– เด็กที่ผลักคือเป็นเด็กออทิสติก ตอนเกิดเหตุผู้ปกครองปล่อยให้เล่นไม่ได้คอยดูให้อยู่ในสายตา… pic.twitter.com/Q5eHyWiaxE
— MintChyy (@Kadeesayong) June 8, 2026
