கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய கூட்டத்தில், எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தற்போது சிபிஐ வசம் சென்றுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 17-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து இன்று (மார்ச் 11) செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி செம காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

​”நிகழ்ச்சி நடத்தியது வேறொரு இயக்கம், அதற்கு அனுமதி வழங்கியது காவல்துறை அதிகாரிகள். அப்படி இருக்கும்போது எனக்கு எதற்கு சம்மன் அனுப்பினார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது” எனத் தனது பாணியில் ‘பஞ்ச்’ வைத்துள்ளார். 41 பேர் பலியான வழக்கில் தவெக-விற்கும் செந்தில் பாலாஜிக்கும் என்ன சம்பந்தம்? சிபிஐ கையில் என்ன ஆதாரம் சிக்கியது? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளதால் வரும் 17-ஆம் தேதி ஆஜராகும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.