சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஹைதராபாத் -கோட்டையம் சிறப்பு ரயில் டிசம்பர் 19, 26, ஜனவரி 2, 9,16,23 ஆகிய தேதிகளில் புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை வழியாக மறுநாள் மாலை 4.40 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் டிசம்பர் 13, 20,27, ஜனவரி 3, 10,17,24 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். அதனைப் போலவே மசிலிப்பட்டினம் – கோட்டயம் சிறப்பு ரயில் டிசம்பர் 19,26, ஜனவரி 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் இரவு 10.5 மணிக்கு கோட்டயம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.