நாடு முழுவதும் 2004ம் வருடத்திற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் என்பது கிடையாது உள்ளிட்ட பாதகமான சூழல் ஏற்பட்டதால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு இந்த எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.