தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில், துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் “சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று மீண்டும் பேசியதாக ஒரு சர்ச்சை சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இதற்கு தனது ‘X’ (ட்விட்டர்) பக்கத்தில் மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமண சிவராமகிருஷ்ணன், “பழைய மோட்டாரில் சில பாகங்களை மாற்றி, புது பெயிண்ட் அடித்து, இளைஞர்களை ஏமாற்றி அதிகார நாற்காலியில் அமர வைத்துள்ளனர்.
Old motor changed a few parts and a new coat of paint fooled young kids to sit in a position of power But the Eradicating Sanathana Dharma saw an exit of a Deputy CM. Please don’t make the same mistake, you will get Eradicated soon. We Hindus believe Sanathana Dharma is ULTIMATE
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) May 17, 2026
சனாதன தர்மத்தை ஒழிக்க நினைத்த ஒரு துணை முதலமைச்சர் ஏற்கனவே பதவியை விட்டு வெளியேறியதை மறந்துவிட வேண்டாம், அதே தவறை மீண்டும் செய்தால் நீங்களும் விரைவில் ஒழிக்கப்படுவீர்கள்; சனாதன தர்மமே இறுதியானது என்பதை இந்துக்களாகிய நாம் நம்புகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்துக்கள் பொதுவாக அமைதியையும் சகிப்புத்தன்மையையும் கடைப்பிடிப்பவர்கள் என்றும், ஆனால் ரப்பர் பேண்ட் போல அந்த சகிப்புத்தன்மையை ரொம்ப நீட்டினால் அது அறுந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
தனக்கு இந்துக்களை கேலி செய்து பல பதில்கள் வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு மூங்கிலை எளிதாக உடைத்துவிடலாம், ஆனால் மொத்தமாகச் சேர்த்துக் கட்டினால் உடைக்க முடியாது, எனவே சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிறவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக்கூறி ‘ஜே ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கீ ஜே’ எனத் தனது பதிவை முடித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் ஆதரவும் எதிர்ப்பும் பெற்று பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
