தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் சத்யராஜ். இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில், ஒப்பற்ற திரை கலைஞர், சிந்தனையாளர் மற்றும் தமிழர்கள் எங்கும் பாதிக்கப்பட்டாலும் தமிழர் பக்கம் நின்று உரிமை குரல் எழுப்பும் இன உணர்வும் மான உணர்வும் கொண்ட புரட்சித்தமிழன்! அன்பிற்கினிய அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.