2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தவெக அரசுக்கும், அதிமுகவின் சி.வி.சண்முகம் தரப்பிற்கும் இடையே அரசியல் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள பிரேக்கிங் அறிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சிக்கு அதிமுகவின் ஒரு தரப்பு ஆதரவு அளிப்பது குறித்தும், அதற்கு அதிமுகவிற்குள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் எழுந்துள்ள உட்கட்சி மோதல்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குத் தனது பாணியில் மிக சுருக்கமாகவும் அதிரடியாகவும் பதிலளித்துள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “இந்த விவகாரத்தில் ஏதேனும் சட்ட ரீதியான சிக்கல்கள் அல்லது உட்கட்சிப் பிரச்சினைகள் வந்தால், அதை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமே சட்டப்படி எதிர்கொள்வார்.

அதனைச் சந்திக்கும் வல்லமை அவருக்கு இருக்கிறது” என்று ஓப்பனாகத் தெரிவித்துள்ளார். தவெக அமைச்சரின் இந்த அதிரடி கமெண்ட், அதிமுகவின் சண்முகம் தரப்பிற்குத் தவெக அரசு கொடுக்கும் தார்மீக ஆதரவை வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளதால், அறிவாலயமும் இரட்டை இலை கூடாரமும் இந்த நகர்வை உற்று நோக்கத் தொடங்கியுள்ளன.