நாட்டின் தற்போதைய அவல நிலை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், “இன்று நாட்டின் இளைஞர்கள் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர்; நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது இளைஞர்களை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுமட்டுமன்றி பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது, எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது, பணவீக்கமும் உச்சத்தைத் தொட்டுள்ளது” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடியைச் சாடிய ராகுல் காந்தி, “நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் மோடியோ இத்தாலி பிரதமர் மெலோனியுடன் சேர்ந்து ‘மெலோடி’ (Melodi) சாப்பிடுவதில் பிஸியாக இருக்கிறார்; நாட்டின் தற்போதைய லட்சணம் இதுதான்” என்று மிகக் காரசாரமாகத் தாக்கியுள்ளார். நீட் விவகாரம் மற்றும் விலைவாசி உயர்வைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசியுள்ள இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
