பீகார் மாநிலத்தில் உள்ள, வார்டு உறுப்பினர் ஒருவர் ஒரு தம்பதியினரைக் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருமணமாகி வேறொரு இளைஞருடன் பேசிக்கொண்டிருந்த அப்பெண்ணை, வார்டு உறுப்பினர் தனது செல்வாக்கைப் பயன்படுத்திப் பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

25 விநாடிகள் ஓடும் இந்தக் காணொளியில், அங்கிருந்தவர்கள் யாரும் அவர்களைத் தடுக்க முன்வராதது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதோடு, சட்டத்தைக் கையில் எடுக்க ஒரு மக்கள் பிரதிநிதிக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியையும் வலுவாக எழுப்பியுள்ளது.

“>

 

இது தொடர்பாகக் காவல்துறையினர் தற்போது நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். குற்றச்செயலில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.