சசிகலாவை நேரில் சந்தித்த காரணத்திற்காக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியாரைக் கட்சியிலிருந்து நீக்கி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக இன்று (பிப். 06) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.