தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று ஆரூடம் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சிக்கு 100-க்கு 100 மதிப்பெண் போடுவதாகக் கூறுகிறார். ஆனால், மக்கள் அவருக்கு 20 சதவீதம் கூட கொடுக்க மாட்டார்கள், உண்மையில் இந்த ஆட்சிக்கு 0 சதவீதம் தான் கிடைக்கும் என எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு அடி கூட நகராத, ‘ஓடாத ஓட்டை இன்ஜின்’ தான் இந்த திமுக ஆட்சி என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
வெள்ளை அறிக்கை கேட்டால் வெற்றுப் பேப்பரைக் காட்டும் இந்த அரசு, வெறும் விளம்பரங்களை மட்டுமே நம்பி இயங்குவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
