பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த ஒரு வாரமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எச். ராஜாவின் உடல்நிலை குறித்துத் தகவலறிந்த அண்ணாமலை, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
எச். ராஜாவின் குடும்பத்தினரைச் சந்தித்த அண்ணாமலை, அவர்களுக்கு ஆறுதல் கூறி தைரியம் அளித்தார். எச். ராஜா விரைவில் குணமடைந்து மக்கள் பணியைத் தொடருவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எச். ராஜா பூரண குணமடைய வேண்டி, அண்ணாமலை சமீபத்தில் பழனி முருகன் கோயிலுக்குச் சென்று காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. கட்சித் தலைவர்களுக்கிடையிலான இந்த ஆழமான நட்பு பாஜக தொண்டர்களை நெகிழ வைத்துள்ளது.
