தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான குடும்பப் பிரச்சினையில், விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டிலேயே தமக்குத் தங்குவதற்கு உரிமை கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகத் திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் (MP) மற்றும் எழுத்தாளர் சல்மா கருத்துத் தெரிவித்துள்ளார்.
சங்கீதாவிற்கு மட்டுமல்ல , அத்தனை பெண் களுக்கும் விவாகரத்திற்கு முன்பாக அவர்களது கணவரது வீட்டில் வசிக்கும் உரிமையை சட்டம் தந்திருக்கிறது. அவர்கள் காவல்துறையின் உதவியுடன் உள்ளே நுழையலாம். அதனை கணவரால் தடுக்க இயலாது. விமன் ஹெல்ப்லைன் 181 வழியாக சட்ட உதவி கோர அனைத்துப் பெண்களுக்கும்… pic.twitter.com/ZR6yORO7G3
— Salma (@salma_poet) March 7, 2026
“>
திருமணமான பெண்களுக்குத் தங்களது கணவர் வீட்டில் வசிக்கும் முழு உரிமையைச் சட்டம் வழங்கியுள்ளதாகவும், அந்த வீட்டை விட்டு வெளியேறச் சொல்லவோ அல்லது தங்குவதைத் தடுக்கவோ கணவருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சங்கீதாவிற்குத் சென்னையில் தங்குவதற்கு வேறு இடம் இல்லாத சூழலில், அவர் காவல்துறையின் உதவியை நாடித் தனது வீட்டிற்குள் நுழையலாம் என்றும், அச்சுறுத்தல் ஏற்பட்டால் 181 என்ற மகளிர் உதவி எண் மூலம் சட்ட ரீதியான தீர்வுகளைப் பெறலாம் என்றும் சல்மா அறிவுரை வழங்கியுள்ளார்.
அரசியல் ரீதியாக விஜய்யின் தவெக கட்சிக்கும் திமுகவிற்கும் இடையே மோதல் நிலவி வரும் வேளையில், சங்கீதாவிற்கு ஆதரவாகத் திமுக தரப்பிலிருந்து வெளிப்படையாகக் குரல் எழுப்பப்பட்டிருப்பது தமிழக அரசியலில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
